BFA Entrance Exam Guide Book Author
ஆசிரியர்
Dr. P. ஸ்டுபர்ட் சிபி MFA, MPhil, Ph.D.
(வண்ணக்கலை)
முனைவர். பொன்.ஸ்டுபர்ட் சிபி அவர்கள் அழகப்பா
பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்,
கன்னியாகுமரி மாவட்டத்தின் கொடுமுட்டி எனும் ஊரை சார்ந்த இவர் நாகர்கோயில் சித்ரா
ஓவியப்பள்ளியில் தன்னுடைய ஓவியப் பயிற்சியை துவங்கினார். பின்னர் கும்பகோணம்
அரசு கவின்கலைக் கல்லூரியின் நுழைவுத்தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்று இளங்கவின்கலை
வண்ணக்கலை பட்டத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் தொடர்ந்து அங்கு
மாஸ்டர் அரங்கராஜன் அவர்களிடம் முதுகவின்கலை படிப்பை வண்ணக்கலை துறையில் முடித்து
பல்கலைகழக முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி
நல்கையுடன் தமிழ் பல்கலைகழகத்தில் பேராசிரியர் பவுன்துரை அவர்களின் வழிகாட்டுதலின்படி
ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்தை பெற்றார். பின்னர் சில ஆண்டுகள் கேம்பிரிட்ஜ்
பல்கலைகழக படத்திட்டத்தின் கலை மற்றும் வடிவமைப்பு ஆசிரியராக மாலத்தீவு நாட்டின்
கல்வி அமைச்சகத்தில் பணிபுரிந்தார். தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை
பல்கலைகழகத்தில் முனைவர். K.இராமன் அவர்களின் வழிகாட்டுதலின்படி “கன்னியாகுமரி
மாவட்ட சுவரோவோங்கள் மற்றும் மூலிகை வண்ணங்கள் - ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் முனைவர்
பட்ட ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் (Ph.D) பெற்றுள்ளார். ஐந்தாயிரம் பிரதிகளுக்கு மேல்
விற்பனையான “TRB-ஓவிய ஆசிரியர்” எனும் வினா விடை நூலை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய ஓவிய
ஆசிரியர் தேர்விற்காக முதன் முதலில் வெளியிட்டுள்ளார். பல்வேறு ஆய்விதழ்களில் ஓவியம் குறித்த ஆய்வு
கட்டுரைகள் வெளியிட்டுள்ளதுடன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வாயிலாக கவின்கலை
தொடர்புடைய பல்வேறு கருத்தரங்குகளையும், ஆய்வரங்குகளையும் ஒருங்கிணைத்துள்ளார்.
Condact: 7339649334
Comments
Post a Comment